தமிழக முன்னாள் ஆளுநர் எஸ்.எஸ் பர்னாலா காலமானார்!

தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்.
தமிழக முன்னாள் ஆளுநர் எஸ்.எஸ் பர்னாலா காலமானார்!

சண்டிகர்: தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்.

பஞ்சாப் மாநில முதல்வரராக இருந்தவர் சுர்ஜித் சிங் பர்னாலா. இவர் தமிழகத்தின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். 1990-1991 மற்றும் 2004-2011 ஆகிய இரண்டு காலகட்டங்களில் தமிழகத்தின் ஆளுநராக அவர் பணிபுரிந்துள்ளார்.

லக்னோவில் சட்டம் பயின்ற அவர் இந்தியாவின் விடுதலைப்போராட்டத்திலும் பங்கேற்றவராவார். வாஜ்பாய் அமைச்சரவையில் ரசாயனத்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

உடல்நலக் குறைபாடு காரணமாக சண்டிகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை உயிரிழந்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com