ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பீகார் படகு விபத்து: பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

பீகார் தலைநகர் பாட்னாவிற்கு அருகே  கங்கை நதியில் நேற்று இரவு நடந்த படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

News image
Updated On :15 ஜனவரி 2017, 6:01 am

DIN

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவிற்கு அருகே  கங்கை நதியில் நேற்று இரவு நடந்த படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

பீகார் தலைநகர் பாட்னாவிற்கு அருகே கங்கை நதியில் நேற்று மாலை படகு ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 21 பேர் மரணம் அடைந்தனர்.  குறிப்பிட்ட படகில் சுமார் 40 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகர சங்கராந்தி விழாவை கொண்டாடி விட்டு அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பீகார் படகு விபத்தில் மரணம் அடைந்தவர்களின்  குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தங்களது ஆழ்ந்த இரங்கலை டிவிட்டர் செய்தி வழியாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.