ஜல்லிக்கட்டு விவகாரம்: தமிழக அரசு மீண்டுமொரு கேவியட் மனு தாக்கல்!

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.
ஜல்லிக்கட்டு விவகாரம்: தமிழக அரசு மீண்டுமொரு கேவியட் மனு தாக்கல்!

புதுதில்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எழுச்சி மிகு போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு கடந்த திங்கள்கிழமை அன்று  சட்டமன்றத்தில் நிரந்தர சட்டமொன்றை நிறைவேற்றியது.

அப்பொழுதே உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக புதியதாக ஏதேனும் வழக்குகள் தொடுக்கப்பட்டால் தமிழக அரசையும் அதில் மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தங்களை ஆலோசிக்காமல் அதில் தீர்ப்பு எதுவும் வழங்கப்படக்கூடாது என்றும் கேவியட் மனுவை தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் தற்பொழுது தமிழக அரசின்  புதிய சட்ட அறிவிப்பையம், ஜல்லிக்கட்டு தொடர்பாக வெளியிட்ட அறிக்கையை மத்திய அரசு விளக்கிக் கொண்டதையும் எதிர்த்து, இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் புதியதொரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பாக மீண்டும் ஒரு கேவியட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஜல்லிக்கட்டு தொடர்பான எந்த ஒரு வழக்கானாலும் தங்களை இணைத்துக்  கொள்ள வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com