
புது தில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் வரும் ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் தீர்ப்பு குறித்து வழக்குறைஞர்கள் கேட்டதற்கு, தில்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி இன்று பதில் அளித்தார்.
அதாவது 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம். அவ்வாறு வழங்கமுடியாவிட்டால் அடுத்த 10 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சராக அ. ராசா இருந்த போது, 2ஜி அலைக்கற்றையைப் பெற முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு வழங்காமல், தகுதியில்லாத நிறுவனங்களுக்கு மிகக் குறைந்தவிலையில் 2% ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதால் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறி வழக்குத் தொடரப்பட்டது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 தனி நபர்கள் மற்றும் 3 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.