கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ.148 கோடி சொத்துகள் முடக்கம்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்குச் சொந்தமான ரூ.148 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:32 pm

DIN

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்குச் சொந்தமான ரூ.148 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: ஆந்திர அரசின் முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதனால் பயனடைவதற்கு ஏதுவாக, ஜெகன் மோகன் ரெட்டி ஏராளமான நிறுவனங்களை உருவாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில், ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ அமைப்பால் கடந்த 2004}ஆம் ஆண்டு மே மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, இந்த வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டிக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, ஆந்திரத்தில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்குச் சொந்தமான ரூ. 148 கோடி மதிப்புடைய சொத்துகளை (நிலம்) அமலாக்கத் துறை முடக்கியது என்று அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.