மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கச் சென்ற ராகுல் காந்தி கைது!

மத்திய பிரதேச மாநிலம் மவுண்ட்சாரில் தடையை மீறி, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கச் சென்ற காங்கிஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கச் சென்ற ராகுல் காந்தி கைது!

உதாம்பூர்: மத்திய பிரதேச மாநிலம் மவுண்ட்சாரில் தடையை மீறி, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கச் சென்ற காங்கிஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள மண்ட்சவுர் மாவட்டம் பிபல்யா மண்டி பகுதியில் நேற்று முன்தினம் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவையும்  மீறி,  போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 5 விவசாயிகள்  பலி ஆனார்கள். இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை நீடிக்கிறது.

இதற்கிடையே  இன்று மண்ட்சவுர் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறப்போவதாக  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். ஆனால் மண்ட்சவுர் நகருக்குள் நுழைய யாருக்கும் அனுமதி கிடையாது என்று மத்திய பிரதேச மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

ஆனால் தடையையும் மீறி உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ஆறுதல் கூற இன்று ராஜஸ்தான் மாநிலம் உதாம்பூர் சென்றார் ராகுல் காந்தி. அங்கிருந்து பின்னர் கார் வழியாக மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சவுர் செல்ல ராகுல் திட்டமிட்டார். ஆனால் அவரைத் தடுக்கும் விதமாக எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

முதலில் ராஜஸ்தான் மாநில எல்லைப் பகுதியான உதம்பூர் வரை வாகனத்தில் பயணம் செய்து அங்கிருந்து இருசக்கர வாகனத்திலும், கால்நடையாகவும் ராகுல் காந்தி நடந்து சென்றார். நூற்றுக்கும் அதிகமான காங்கிரஸ் தொண்டர்களும் மண்ட்சவுர் நோக்கி சென்றனர். அவரோடு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், கமல் நாத் உள்ளிட்டோர் சென்றனர்.

வழியெங்கும் காவல்துறையினால் உருவாக்கபட்டிருந்த போலீசின் சிறப்பு சோதனை சாவடிகளை ராகுல் காந்தி  கவனமாக தவிர்த்தார். தடைகளை தாண்டி குதித்தும், மோட்டார் சைக்கிள் மூலம் மண்ட்சவுருக்கு நுழைய முயற்சி செய்தார். இறுதியில் தன்னை தடுத்து நிறுத்திய போலீசுடன் ராகுல் காந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து 151 A சட்டப்பிரிவின் கீழ் போலீஸ் ராகுல் காந்தியை தடுப்பு காவலில் வைத்து உள்ளது. அங்கிருக்கும் உரத் தொழிற்சாலையொன்றின் விருந்தினர் மாளிகையில் ராகுல் தற்பொழுது தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே கைது நடவடிவக்கை பற்றி ராகுல் காந்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:

பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் குடும்பத்தினரை நான் சந்திப்பதை தடுப்பதற்கு மத்திய பிரதேச மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுக்கள் அவர்களால் முடிந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. பிரதமர் மோடி தொழில் அதிபர்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்துவிட்டார்; ஆனால் அவரால் விவசாயிகள் கடனை மட்டும் தள்ளுபடி செய்ய முடியவில்லை.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com