வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

அனைத்து கட்சியினரிடமும் ஆதரவு கோருவேன்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோர உள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளரும், பிகார் ஆளுநருமான ராம்நாத் கோவிந்த்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:47 pm

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோர உள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளரும், பிகார் ஆளுநருமான ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க தில்லிக்கு திங்கள்கிழமை சென்ற அவர், அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.
மேலும், தனக்கு அனைவரும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் ராம்நாத் கோவிந்த் கூறினார்.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக தம்மை பாஜக தலைமை அறிவித்த சில நிமிடங்களிலேயே ராம்நாத் கோவிந்த் தில்லி விரைந்தார். பிரதமர் மோடியிடம் வாழ்த்துப் பெற்ற அவர், பின்னர் அமித் ஷாவின் இல்லத்துக்குச் சென்றார்.
இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அப்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து, ராம்நாத் கோவிந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சாமானிய மனிதனான நான் தற்போது மிகப் பெரிய பொறுப்புக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளேன்.
இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் பிரதிநிதிகள் அனைவரிடமும் ஆதரவு கோரத் திட்டமிட்டுள்ளேன்.
குறிப்பாக முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளேன். நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.