இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கும் இனி ஆதார் கட்டாயம்!!

உத்திர பிரதே அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதற்கும் இனி ஆதார் அட்டைக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனத்தைத் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதை தடுக்க முடியும் என்று அரசு சொல்கிறது.
இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கும் இனி ஆதார் கட்டாயம்!!
Published on
Updated on
1 min read

உத்திர பிரதேச அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதற்கும் இனி ஆதார் அட்டைக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனத்தைத் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதை தடுக்க முடியும் என்று அரசு சார்பில் சொல்லப்படுகிறது.

இனி யாராவது ஆம்புலன்ஸ் சேவையை பெறவேண்டும் என்றால் அவரது உறவினருடையதோ அல்லது அவருடைய ஆதார் அட்டை எண்ணைப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்திர பிரதேச அரசு அறிவிக்கவுள்ளது. இதனால் கிராமப்புறங்களில் வாழ்பவர்களும், ஆதார் அட்டை இல்லாதவர்களும் பெரும் அவதிக்கு உள்ளாக நேரிடும். 

அரசாங்கத்தால் வழங்கப்படும் பொது இலவச ஆம்புலன்ஸ் சேவைகளில் பல வகையான குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமே உள்ளன. ஓட்டுநர்கள் சில சமயங்களில் வேறெங்காவது பயணம் செய்துவிட்டு, அதற்கு ஆகும் எரிப்பொறுள் செலவை நோயாளியை அழைத்துவரதான் ஆனது என்று கணக்குக்காட்டுவதாகவும், மேலும் நோயாளி போல் இவர்களே போலி அழைப்புகள் செய்வது போன்ற பல முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க உத்திர பிரதேச மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு, இதற்கான அறிக்கையை அனைத்து முக்கிய மருத்துவ அதிகாரிகளுக்கும்  அனுப்பியுள்ளது.

ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட உள்ள சரியான தேதியை அரசு இன்னும் அறிவிக்கவில்லை, ஒருவேலை நோயாளியின் நிலைமை தீவிரமாக இருந்தால், அவர்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் மருத்துவமனையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம் சேர்க்கப்படுவர். 

இருப்பினும் மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளில் இன்னமும் ஆதார் அட்டை வழங்கப்படவில்லை. ஏற்கனவே மோசமான சுகாதார சூழல், பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லாத நிலையில், இந்த ஆதார் எண்ணைக் கட்டாயமாக்குவது நிலைமையை இன்னும் கடினமாக்கியுள்ளது.

ஆம்பூலன்ஸ் சேவையில் ஊழலைக் கட்டுப்படுத்துவது நல்ல விஷயம்தான், ஆனால் ஆதார் அட்டை இல்லாதவர்கள் உயிருக்குப் போராடினால் என்ன செய்வது? ஏற்கனவே பல பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்குக் கூட வருவதில்லை என்பதே மக்களின் கவலையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com