சாலை விபத்தில் தெலுங்கு நடிகர் பரத் ராஜ் மரணம்

சாலை விபத்தில் தெலுங்கு நடிகர் பரத் ராஜ் மரணம்

பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் இளைய சகோதரரும், நடிகருமான பரத் ராஜ் (49) ஹைதராபாதில் சனிக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.
Published on

பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் இளைய சகோதரரும், நடிகருமான பரத் ராஜ் (49) ஹைதராபாதில் சனிக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து கச்சிபோலி பகுதிக்கு காரில் சனிக்கிழமை இரவு பரத் ராஜ் சென்றுகொண்டிருந்தார். சுமார் 11 மணியளவில் கோத்வல்குடா பகுதி அருகே வந்துகொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதன்காரணமாக, காரின் முன்பக்கம் முழுவதும் நொறுங்கியது.
காரை ஓட்டிவந்த பரத் ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு இறுதிச்சடங்குக்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பரத், மது அருந்திவிட்டு காரை ஓட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியில் எச்சரிக்கை விளக்கு ஒளிரவிடப்படவில்லை. இதன்காரணமாகவும் விபத்து நேர்ந்திருக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக லாரி ஓட்டுநருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
பல தெலுங்கு திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் பரத் ராஜ் நடித்திருக்கிறார். அவரது மூத்த சகோதரர் ரவிதேஜா, தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com