கொல்கத்தாவில் வசித்து வரும் கர்ப்பிணி வாங்கிய மெக்டொனால்ட் நிறுவனத்தின் பிரெஞ்ச் பிரைஸில் செத்துப் போன பல்லி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சர்வதேச உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது போதாத காலம் போல, ஏற்கனவே, நெஸ்லேவின் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டு மீண்டு வந்த நிலையில், தமிழகத்தில் பெப்ஸி, கோக் போன்ற அன்னிய குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த பிரியங்கா மொய்த்ரா, தனது குழந்தையுடன் மெக்டொனால்ட் கடைக்குச் சென்று பிரெஞ்ச் பிரைஸ் வாங்கிக் கொடுத்தார். அதனை சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தை, அதனுள், நன்கு 'ஃப்ரை' செய்யப்பட்ட பல்லி இருந்ததைப் பார்த்தார். 6 மாத கர்பிணியான பிரியங்கா, சாப்பிடும் உணவில் வறுக்கப்பட்ட பல்லி இருப்பதைப் பார்த்து அதிர்ந்து, மேலாளரிடம் தகவல் தெரிவித்தார். ஆனால் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் அதை புகைப்படம் எடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து ஆங்கில நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.
மெக்டொனால்ட் நிறுவனம், தனது உணவு சுகாதாரத்தில் ஏற்கனவே பல முறை கடும் சர்ச்சையில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசிய, ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் அயல்நாட்டு மல்யுத்த பயிற்சியாளா்கள் நியமனம்

சீலிடப்பட்ட மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பிவைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 89.46 % வாக்குப்பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 85.22% வாக்குகள் பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

