பெங்களூர்: பெங்களூருவின் புறநகர் பாதையில் சட்டத்துக்கு விரோதமாக அமைக்கப்பட்ட இரண்டு விளம்பர பேனர்களை அகற்றி தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூரில் ரிங் ரோடு பகுதியில் இருந்த 27 மரங்கள் ஆசிட் ஊற்றியும், வெட்டியும் அகற்றப்பட்டன. இது குறித்த புகார்களை விசாரணை செய்த தோட்டக்கலைத் துறையினர், மரங்கள் வேண்டும் என்றே ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருப்பதும், இரவோடு வெட்டப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதற்குக் காரணத்தை ஆராய்ந்த போது தோட்டக்கலைத் துறைக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது, அந்த முக்கியச் சாலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு விளம்பரப் பலகைகளே அதற்குக் காரணம். சாலையின் தடுப்புப் பகுதியில் இருக்கும் அந்த மரங்களால், இந்த விளம்பரப் பலகைகள் பொதுமக்களின் கவனத்தில் இருந்து மறைந்து விடும் என்பதால், மரங்களுக்கு தண்ணீருக்கு பதிலாக ஆசிட் ஊற்றப்பட்டுள்ளது.
அந்த விளம்பரங்கள் வேறு ஒன்றும் இல்லை, பீமா ஜுவல்லரி, ஐபோன் 7 நிறுவனங்களின் விளம்பரப் பலகைகள்தான். தாங்கள் பல லட்சம் செலவிட்டு வைத்த பேனரைவிட இந்த மரங்களா முக்கியம் என்று அவற்றுக்கு சாவு மணி அடித்ததோடு, அதையும் யாருக்கும் தெரியாத வகையில் கொடூர எண்ணத்தோடு ஆசிட் ஊற்றியிருப்பது அங்குள்ள பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உடனடியாக நடவடிக்கை எடுத்த தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், நகைக் கடையின் விளம்பரத்தை உடனடியாக அகற்றிவிட்டனர். ஃபோன் விளம்பரப் பலகையும் நேற்று அகற்றப்பட்டுவிட்டது.
இது ஒரு துவக்கமாக எடுத்துக் கொண்டு மரங்களை வெட்டி எடுத்து வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தோட்டக்கலைத் துறையின் அதீத முயற்சியால் ஆசிட் ஊற்றி பாதிக்கப்பட்ட 17 மரங்களில் 3 மரங்களை காப்பாற்றிவிட்டனர். அவை துளிர்க்க தொடங்கி விட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களித்தவா்களுக்கு மரக்கன்று வழங்கிய ஊரக வளா்ச்சித் துறை

ஆசிய, ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் அயல்நாட்டு மல்யுத்த பயிற்சியாளா்கள் நியமனம்

சீலிடப்பட்ட மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பிவைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 89.46 % வாக்குப்பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


