கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆந்திரம் வளர்ச்சியிலும் ஊழலிலும் முதலிடம்: சொன்னது வேறுயாருமல்ல மாநில முதல்வர்தான்

ஆந்திர மாநிலம் வளர்ச்சியிலும் ஊழலிலும் முதல் இடத்தில் இருப்பதாக, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வாய் தவறி சொன்ன விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:17 am

தினமணி


ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் வளர்ச்சியிலும் ஊழலிலும் முதல் இடத்தில் இருப்பதாக, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வாய் தவறி சொன்ன விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆந்திர மாநில சட்டப்பேரவையில் பேசியபோதுதான் முதல்வர் சந்திரபாபு நாயுடு இவ்வாறு கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆளும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இதுவரை செயல்படுத்தப்படாமலேயே இருப்பதாகவும், சந்திரபாபு நாயுடு பொய்களைக் கூறி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த சந்திரபாபு நாயுடு, இந்தியாவிலேயே ஆந்திர மாநிலம் தான் ஊழல் மற்றும் வளர்ச்சியில் முதலிடம் வகிப்பதாக வாய் தவறி கூறிவிட்டார்.

அப்போது எதிர்க்கட்சிகள் கோஷமிட்டுக் கொண்டிருந்ததால் சந்திரபாபு நாயுடுவின் இந்த பேச்சினை யாரும் கவனிக்கவில்லை. அதன்பிறகு வெளியான விடியோக்களை வைத்து எதிர்க்கட்சிகளின் சர்ச்சையை எழுப்பினர்.

எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பலரும் இந்த விடியோவை சமூக தளங்களில் பரப்பி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.