’ஊழலில் ஆந்திரம் முதல் மாநிலம்?': சந்திரபாபு விளக்கம்

ஊழலில் முதல் மாநிலம் ஆந்திரப் பிரதேசம் என்று தவறுதலாக கூறிவிட்டதாக அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கமளித்தார்.
’ஊழலில் ஆந்திரம் முதல் மாநிலம்?': சந்திரபாபு விளக்கம்
Updated on
1 min read

ஊழலில் முதல் மாநிலம் ஆந்திரப் பிரதேசம் என்று தவறுதலாக கூறிவிட்டதாக அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கமளித்தார்.
அந்த மாநில சட்டப் பேரவையில் இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை அளித்த விளக்கம்: வளர்ச்சி, ஊழல் ஒழிப்பில் முதலிடம் வகிக்கும் மாநிலம் ஆந்திரம் என்று கூறுவதற்கு பதிலாக தவறுதலாக வளர்ச்சி, ஊழல் ஆகியவற்றில் முதல் மாநிலம் என்று திங்கள்கிழமை பேரவையில் கூறிவிட்டேன்.
உண்மையில், ஊழலை ஒழித்து வளர்ச்சிப் பாதைக்கு சென்றுகொண்டிருக்கும் மாநிலங்களில் ஆந்திரம்தான் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது.
நான் திங்கள்கிழமை தெரிவித்த கருத்தை அவைக் குறிப்பில் இருந்து அவைத் தலைவர் நீக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com