காலாவதி தேதியுடன் ரூபாய் நோட்டுகளை அச்சிட வேண்டும்: மக்களவையில் எம்.பி. வலியுறுத்தல்

அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை காலாவதி தேதியுடன் அச்சிட வேண்டும் என்று மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஜெயதேவ் கல்லா வலியுறுத்தினார்.
காலாவதி தேதியுடன் ரூபாய் நோட்டுகளை அச்சிட வேண்டும்: மக்களவையில் எம்.பி. வலியுறுத்தல்

அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை காலாவதி தேதியுடன் அச்சிட வேண்டும் என்று மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஜெயதேவ் கல்லா வலியுறுத்தினார்.
நிகழாண்டுக்கான நிதி மசோதா, நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த மசோதாவில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்களை பரிசீலிப்பது தொடர்பான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் பங்கேற்று எம்.பி. ஜெயதேவ் கல்லா பேசியதாவது:
அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை காலாவதி தேதியுடன் அச்சிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே பணப் பதுக்கலைத் தடுப்பதற்கான சிறந்த வழியாக இருக்கும்.
அதேபோல், புதிய ரூ.2000 நோட்டுகளை அரசு விரைவில் திரும்பப் பெற வேண்டும். அதேவேளையில், ரூ.200 நோட்டுகளை அரசு கொண்டு வர வேண்டும் என ஜெயதேவ் கல்லா தெரிவித்தார்.
போக்குவரத்துச் செயலிகள் அறிமுகம்: விபத்து மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த தகவல்களைப் பெறவும், புகார்களைத் தெரிவிக்கவும் 'இ-சலான்' மற்றும் எம்-பரிவாஹன் ஆகிய இரண்டு செல்லிடப்பேசிச் செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மக்களவையில் தெரிவித்தார்.
அதேபோல், நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளைத் தரம் உயர்த்துவதற்காக கடந்த மூன்றாண்டுகளில் ரூ.1.2 லட்சம் கோடி செலவிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நீர் மின்சக்தி உற்பத்தி செலவினைக் குறைக்க பரிசீலனை: நீர் மின்சக்தியை உற்பத்தி செய்வதில் ஏற்படும் செலவினைக் குறைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மக்களவையில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com