அசாமில் மாயமான சுகோய் போர் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு

அஸ்ஸாம் மாநிலம், தேஸ்பூர் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை மாயமான சுகோய் - 30 ரகப் போர் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
file photo
file photo

அஸ்ஸாம் மாநிலம், தேஸ்பூர் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை மாயமான சுகோய் - 30 ரகப் போர் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சோனித்பூர் மாவட்டம், தேஸ்பூர் அருகே இந்திய விமானப் படை தளம் அமைந்துள்ளது. இங்கு, போர் விமானங்களை இயக்க இந்திய விமானப் படையைச் சேர்ந்த விமானிகளுக்கு பயிற்சி கொடுப்பது வழக்கம்.

இதன்படி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு 2 வீரர்களுடன் சுகோய் - 30 ரகப் போர் விமானம் புறப்பட்டது.

எனினும், 11.30 மணியளவில் அந்த விமானம் திடீரென மாயமானது. முன்னதாக, கோபூரை அடுத்த துபியா பகுதியில் அந்த விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும், விமானப் படை தளத்துடனான ரேடியோ அலை தொடர்பையும் அந்த விமானம் இழந்தது. 

போர் விமானம் மாயமானது குறித்து, சோனித்பூர் மாவட்ட துணை ஆணையர் மனோஜ் குமார் தேகா அண்டை மாவட்டங்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு விமானத்தை தேடும் பணிகள் நடைபெற்றன.

இதனிடையே, சுகோய் - 30 ரகப் போர் விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது கடத்தப்பட்டதா? என்ற ரீதியில் விசாரிக்கப்பட்டு வந்தது.

விமானம் மாயமாகி 3 நாட்களுக்குப் பிறகு இன்று விமானத்தின் பாகங்கள் சீன எல்லை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

1990-களின் இறுதியில் இந்திய விமானப் படையில் ரஷிய தயாரிப்பான சுகோய் - 30 ரகப் போர் விமானங்கள் இணைக்கப்பட்டன.

அதுமுதல் இதுவரை, இந்தியாவில் மொத்தம் 6 சுகோய் ரகப் போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே, இவை விபத்தில் சிக்கியதாகக் கூறப்பட்டது. கடைசியாக, கடந்த மார்ச் 15 அன்று ராஜஸ்தான் மாநிலம், பார்மர் அருகே சுகோய் - 30 ரகப் போர் விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com