
குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டுள்ளதாக படலே் போராட்டக்குழுத் தலைவர் ஹார்திக் படேல் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நமது நிபந்தனைகளை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே விதி எண் 31 மற்றும் 46-ன் அடிப்படையில் படேல் சமூகத்துக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும் வரும் தேர்தலில் நமது போராட்டக்குழுவில் இருந்து தேர்தலில் போட்டியிடுபவர்கள் வென்றால் இதுதொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற போராடுவார்கள்.
இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ-வாக போட்டியிட வாய்ப்பு வழங்கினால் அதனை நான் ஏற்க மாட்டேன். என்னுடைய நிலைப்பாட்டில் நான் என்றும் தெளிவாக இருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே ஒன்றுதான். எனவே யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று நான் தெரிவிக்க மாட்டேன். அந்த தீர்ப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.