கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு பள்ளிக்கட்டணம் கட்டும் மாணவர்கள்: அதிர்ச்சித் தகவல்!

ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சில பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு மாணவர்கள் பள்ளிக்கட்டணம் கட்டும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு பள்ளிக்கட்டணம் கட்டும் மாணவர்கள்: அதிர்ச்சித் தகவல்!

விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சில பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு மாணவர்கள் பள்ளிக்கட்டணம் கட்டும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள படேரு மற்றும் பேடபயலு தாலுகாக்களில் உள்ள பழங்குடியின கிராமங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனைகளில் 57 ஏக்கர் பரப்பளவில் பயிரிடபப்பட்டிருந்த கஞ்சா அழிக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக அந்தப்பகுதியில் கஞ்சா கடத்தும் ஒருவனை சமீபத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவனிடம் மேலும் தொடர்ந்த விசாரணையில்தான் பள்ளி மாணவனான அவனது மகனும் இந்த கஞ்சா  கடத்தல் தொழிலில் பாதுகாவல் / எச்சரிக்கை செய்யும் நபராக விளங்கிய அதிர்ச்சித் தகவல் தெரிய வந்தது.

பள்ளி செல்லும் மகனை இதில் ஈடுபடுத்தியது தொடர்பான கேள்விக்கு, தான் அவ்வாறு செய்யா விட்டால் தன் மகனை பள்ளியில் படிக்க வைக்க இயலாது என்று அவன் தெரிவித்தான். தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் கஞ்சா கடத்தல் கும்பல்களுக்கு தகவல் சொல்லும் நபராக செயல்பட்டு பணம் ஈட்டுமாறு தன் மகனிடம் கூறியதாக அவன் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்தான்.      

இது தொடர்பாக அந்தப் பகுதிகளில் நடத்தப்பட்ட விசாரணையில் படேரு தாலுகாவினைச் சேர்ந்த உருகொண்டா குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் கூறும் பொழுது, 'கஞ்சா கடத்தல் மற்றும் அது தொடர்பான பணிகள் என்பது அந்தப்பகுதிகளில் உள்ள ஆண்களுக்கு மட்டும் அல்ல; பள்ளி  மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் கூட வருமானம் ஈட்டும் ஒரு தொழிலாக விளங்குகிறது. அரசாங்கம் எவ்வளவோ மாற்று மற்றும் வளர்ச்சித் திட்டங்களைப் பற்றிப் பேசினாலும், அதில் ஒரு சில மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. வேலையின்மையும் அரசின் ஆதரவு இல்லாததுமே இத்தகைய கஞ்சா கடத்தல் கும்பல்க ளை நோக்கி மக்களைத்  தள்ளுகிறது' என்று தெரிவித்தார்.   

இத்துடன் பெரும்பாலான பழங்குடியின விவசாயிகளுக்கு  அவர்களது நிலத்தில் கஞ்சா பயிரிட பணம் கொடுத்தும் அல்லது அவர்களது நிலத்தை குத்தகைக்கு எடுத்தும் கஞ்சா பயிரிடப்படுகிறது. மேலும் இத்தகைய நிலங்களில் வேலை செய்ய தினக்கூலியாக ரூபாய் 100 முதல் 200 வரை கஞ்சா கடத்தல் கும்பல்களால் வழங்கப்படுகிறது.

இவர்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அடக்கம் என்பது வருத்தம் அளிக்கும் செய்தியாகும். 

அத்துடன் விளைவிக்கப்படும் கஞ்சாவினை  வெவேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பணியில் அப்பகுதி  ஆட்களை ஈடுபடுத்த பணத்துடன் அவர்களுக்கு பைக்குகளோ அல்லது விலையுயர்ந்த ஸ்மார்ட் போன்களோ கொடு த்து ஈடுபட வைக்கிறார்கள்.

இத்தகைய ஒரு மோசமான சூழலில் இருந்து அந்த மக்களை காப்பாற்றுவது அரசாங்கத்தின் கடமையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com