தனி ஒருவனாக வருடத்திற்கு 12 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்றி ஏரி ஒன்றைக் காத்த இளைஞன்! 

காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் உள்ள ஏரி ஒன்றை, குப்பை பொறுக்கும் சிறுவன் ஒருவன் தனி ஆளாக வருடத்திற்கு 12 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தனி ஒருவனாக வருடத்திற்கு 12 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்றி ஏரி ஒன்றைக் காத்த இளைஞன்! 
Published on
Updated on
1 min read

காஷ்மீர்: காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் உள்ள ஏரி ஒன்றை, குப்பை பொறுக்கும் சிறுவன் ஒருவன் தனி ஆளாக வருடத்திற்கு 12 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வடக்கு காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் உள்ளது வூலர் ஏரி. இந்த ஏரியில் கிடக்கும் குப்பைகளை பொறுக்கி விற்று வாழ்ந்து வருபவன் பிலால் தர் என்னும் இளைஞன். இவனைப் போன்று குப்பை பொறுக்குபவராக வாழ்ந்து வந்த இவனது தந்தை, கடந்த 2003-ஆம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தார்.

தந்தையின் திடீர் மரணத்திற்குப் பிறகு, தனது 14-ஆம் வயதில் தாய் மற்றும் இரண்டு தங்கைகளைக் காப்பாற்றும் பொருட்டு பிலால் முழுமையாக இந்த தொழிலில் ஈடுபடத் தொடங்கினான். வூலர் ஏரியில் கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகளை அவன் நீக்கி வந்தான்.  அப்பொழுது ஊதியமாக ஒரு நாளைக்கு அவனுக்கு ரூபாய் 150 முதல் 200 வரை கிடைத்து வந்தது.

அதன் பின்னர் தனக்கு வருமானம் தரும் வூலர் ஏரியினை சுத்தம் செய்வதை தன்னுடைய பணியாக பிலால் ஏற்றுக் கொண்டான். அதன்படி தற்பொழுது வருடத்திற்கு 12 ஆயிரம் கிலோ குப்பைகளை பிலால் அகற்றி சுத்தப்படுத்தி வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவனது சலியா முயற்சிகளின் காரணமாக தற்பொழுது பிலால் ஸ்ரீநகர் நகராட்சி ஆணையத்தின் விளமபரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளான்.  அவனுக்கு என தனியான சீருடையும் வாகனமும் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் அவன் பல்வேறு மக்களை சந்தித்து சுத்தத்தின் தேவை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தலாம்.

வூலர் ஏரிக்கு இவனது சேவைகளை பாராட்டும் விதமாக தனியான ஆவணப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.அது பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பரிசுகளைப் பெற்றிருக்கிறது  பிரதமர் மோடி நிகழத்தும் மாதாந்திர வானொலி உரையான 'மன் கி பாத்' நிகழச்சியில் கூட நேற்று அவர் பிலால் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது குடும்பத்திற்கு என நிலையான வருமானம் இல்லாத காரணத்தால் சரியான ஒரு வேலை வழங்குமாறு பிலால் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் வைத்துள்ளான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com