ஜியோ 4ஜி சேவையை 2ஜி/3ஜி செல்போன்களில் பயன்படுத்த உதவும் ஜியோஃபை: அதுவும் ரூ.999ல்!

தொலைத் தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சேவையை, 2ஜி / 3ஜி வசதி கொண்ட செல்போன்களிலும் பயன்படுத்த உதவும் ஜியோஃபையின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஜியோ 4ஜி சேவையை 2ஜி/3ஜி செல்போன்களில் பயன்படுத்த உதவும் ஜியோஃபை: அதுவும் ரூ.999ல்!


புது தில்லி: தொலைத் தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சேவையை, 2ஜி / 3ஜி வசதி கொண்ட செல்போன்களிலும் பயன்படுத்த உதவும் ஜியோஃபையின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

விழாக்காலம் என்றாலே கொண்டாட்டம்தான்; ஜியோ என்றாலே சலுகையோ சலுகை. ரெண்டும் சேர்ந்தா சொல்லவா வேண்டும்... விழாக் கால விலைச் சலுகையால் ஒரே கொண்டாட்டம்தான்.

முற்றிலும் இலவச சிம்கார்டு, அளவற்ற அழைப்பு, தினமும் 1 ஜிபி என தொலைத் தொடர்புத் துறையில் பல அதிரடி சலுகைகளை அறிவித்து, இதுவரை அளவற்ற அழைப்பு என்ற வார்த்தையையே பிரயோகம் செய்யாத தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூட, மிகக் குறைந்த கட்டணத்தில் அளவற்ற அழைப்பு என்னும் வாய்ப்பைக் கொடுக்க வைத்ததன் மூலம் தொலைத் தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் ஜியோ புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், ஜியோ சேவையைப் பெற ஒரே ஒரு விஷயம் தடையாக இருந்தது. அதுதான் 2ஜி/3ஜி வசதி கொண்ட செல்போன்கள். ஜியோ 4ஜி வசதி கொண்ட சிம்கார்டை இந்த வகையான செல்போன்களில் பயன்படுத்த முடியாத நிலை, ஜியோ சேவைக்கே மிகப்பெரிய தடைக்கல்லாகவே இருந்தது. சில செல்போன்கள் மட்டுமே 4ஜி வசதியாக அப்க்ரேட் செய்யப்பட்டன.

இந்த நிலையில், தனது தடையை தானே உடைத்தெறியும் வகையில் ஜியோ-ஃபை எனும் சாதனத்தை ஜியோ அறிமுகம் செய்தது. இந்த ஜியோ-ஃபை சாதனமானது 1,999 ரூபாய்க்கு விற்பனையானது. அனைத்து ரிலையன்ஸ் கடைகளிலும் இது விற்கப்பட்டது.

இதனை வாங்கிவிட்டால் போதும், உங்கள் 2ஜி / 3ஜி செல்போன்களிலும் 4ஜி சேவையை அனுபவிக்கலாம். இது மற்ற டாங்கல்ஸ் அல்லது போர்டபிள் ஹாட்ஸ்பாட் சாதனங்கள் போல் இல்லை. இந்த ஜியோ-ஃபை சாதனத்தைப் பயன்படுத்தி ஜியோ வழங்கும் அனைத்து சேவைகளையும் 2ஜி / 3ஜி செல்போன்களில் பெறலாம். பல ஆயிரம் கொடுத்து புதிய செல்போன் வாங்க வேண்டுமா என்ற கவலையை இந்த ஜியோ-ஃபை போக்கிவிட்டது.

இந்த ஜியோ-பையில் ஜியோ சிம் இருக்கும். இந்த ஜியோ சிம் ஆக்டிவ் செய்யப்பட்டுவிட்டால், அதனை உங்கள் செல்போனோடு இணைத்து அனைத்து சேவைகளையும் பெறலாம். ப்ளே ஸ்டோரில் இருந்து ஜியோ4ஜிவாய்ஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து விட்டால் போதும்.

சரி இதெல்லாம் பழைய கதைதானே என்று சொல்வது தெரிகிறது. இதெல்லாம் பழைய கதையாக இருக்கலாம். ஆனால், விழாக் காலச் சலுகையாக இந்த ஜியோ-ஃபை தற்போது வெறும் 999 ரூபாய்க்கு கிடைக்கும்.  இதுவரை 1,999க்கு விற்பனையான ஜியோ-ஃபை இனி 999 ரூபாய் மட்டுமே என்பது புதிய தகவல். இந்த சலுகை செப்டம்பர் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை நீடிக்கும்.

அது மட்டுமல்ல, இந்த ஜியோ-ஃபை சாதனத்துடன் ஒன்றல்ல, இரண்டல்ல, 10 செல்போன்களை இணைத்துக் கொள்ளலாம் என்பதும் கூடுதல் அம்சம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com