சுடச்சுட

  

  ஞாயிறுதோறும் பெட்ரோல் நிலையங்கள் இயங்காது: விற்பனை மைய உரிமையாளர்கள் எச்சரிக்கை

  By DIN  |   Published on : 11th April 2017 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டீலர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி தரக்கோரி, பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் விடுமுறை விடப் போவதாக பெட்ரோல்-டீசல் விற்பனை மைய உரிமையாளர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
  இதுகுறித்து அந்த கூட்டமைப்பினர் தெரிவித்திருப்பதாவது:
  டீலர்களுக்கான கமிஷன் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த ஜனவரி மாதத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நாங்கள் அறிவித்திருந்தோம். ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் அளித்த வாக்குறுதியை அடுத்து, அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றோம். எனினும், எண்ணெய் நிறுவனங்கள் வாக்குறுதி அளித்து 4 மாதங்களாகி விட்ட பிறகும், இதுவரை எதுவும் நடக்கவில்லை.
  எனவே, மே மாதம் 10-ஆம் தேதி முதல், எங்களது கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் வரையிலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை விடுவது என்று முடிவு செய்துள்ளோம். அத்துடன், மே மாதம் 10-ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு 10 மணி நேரம் மட்டுமே பணிபுரிவதென்றும் தீர்மானித்துள்ளோம். மே மாதம் 10-ஆம் தேதியன்று, கொள்முதல் இல்லாத தினமாக அனுசரிக்கவும் முடிவு செய்திருக்கிறோம் என்று பெட்ரோல்-டீசல் விற்பனை மைய கூட்டமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai