சுடச்சுட

  

  மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உருவாகியிருக்கிறார் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் சிவசேனை, தெலுங்கு தேசம், லோக் ஜனசக்தி, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட 32 கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
  உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதற்காக மோடிக்கு இந்தக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, மக்கள் மத்தியில் புகழ்பெற்ற தலைவராக மோடி உருவாகியிருக்கிறார் என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
  உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலத்திட்டங்களே காரணம். இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் மக்கள் மத்தியில் மிகப் புகழ்பெற்ற தலைவராக மோடி உருவாகியிருப்பதையே இந்த வெற்றிகள் பறைசாற்றுகின்றன.
  மோடியின் தலைமையின் கீழ் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்த சாதனை தொடர வேண்டுமெனில், வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai