சுடச்சுட

  

  50 நொடிகளில் 'தத்கால்' ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமா? இதோ அருமையான யோசனை

  By ENS  |   Published on : 17th April 2017 12:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  train1


  சென்னை: தத்கால் என்றால் ஹிந்தியில் உடனடியாக என்று அர்த்தம். ரயில்வேயில் தத்கால் முறையில் 50 நொடியில் டிக்கெட் புக் செய்ய முடியும் என்றால் நிச்சயம் அதன் அர்த்தம் சரிதானே?

  உங்கள் செல்பேசியில் 'ஹை-ஸ்பீட்' இன்டர்நெட்டும், 'ரயில் கனெக்ட் ஆப்'-பும் இருந்தால் தத்கால் முறையில் ரயில் டிக்கெட்டை 50 நொடியில் புக் செய்து விடலாம்.

  இந்த ரயில் ஆப் ஏப்ரல் 9ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு வேளை உங்களிடம் ரயில் கனெக்ட் ஆப் இல்லாவிட்டால், மிகக் குறைவாக இருக்கும் தத்கால் ரயில் டிக்கெட்டுகளில் அனைத்து 'பெர்த்' டிக்கெட்டுகளும் 'ஆப்' மூலமாகவே முன்பதிவு செய்யப்பட்டுவிடும்.

  இந்த 'ரயில் கனெக்ட் ஆப்' கடந்த ஜனவரி 7ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து சரியாக 10 நாட்கள் கழித்துத்தான் முதல் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. அதுவும் ஏசி வகுப்பு. தற்போது இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில் டிக்கெட்டுகளையும் இந்த ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  ஆன்லைனில் தத்கால் முறையில் ஏசி வகுப்பு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய காலை 10 மணி முதல் 10.30 வரையிலும், படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகளை பதிவு செய்ய காலை 11 மணி முதல் 11.30 மணி வரையிலும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது, ரயில் நிலைய புக்கிங் கௌண்டர்களில் டிக்கெட் முன் பதிவு செய்யும் பயணிகளின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த தடையும் விலக்கப்பட்டுளள்து. ஆன்லைனில் தத்கால் டிக்கெட்டை எப்போது வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம்.

  உங்கள் செல்போனில் இருக்கும் ரயில் கனெக்ட் ஆப்பில் பணம் நிரப்பப்பட்டிருந்தால், 50 நொடிகளில் தத்கால் டிக்கெட் முன்பதிவு செய்து விடலாம் என்று ஐஆர்சிடிசி தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இது பெரிய அளவில் பயன்படும், அதே சமயம், டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு இது மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

  ரயில்வேயின் செலவினை மிச்சம் செய்யவே இந்த ஆப் துவக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் ரயில்வே டிக்கெட் புக்கிங் கௌண்டர்கள் பெரிய அளவில் குறைக்கப்படும் என்றும் பெயர் கூற விரும்பாத ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai