பாரத் பந்த் விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்க வேண்டாம்: ராம் விலாஸ் பஸ்வான்

அம்பேத்கரை கௌரவப்படுத்தாத காங்கிரஸ் கட்சி இவ்விவகாரத்தில் தலையிடவே கூடாது. இதை காங்கிரஸ் கட்சி அரசியலாக்கப் பார்க்கிறது.
பாரத் பந்த் விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்க வேண்டாம்: ராம் விலாஸ் பஸ்வான்

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதித்து தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது 1989-ஆம் ஆண்டு எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. 

இந்நிலையில் எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலித் அமைப்புகள் நாடு தழுவிய 'பாரத் பந்த்துக்கு' திங்கள்கிழம அழைப்பு விடுத்திருந்தன.

இந்த போராட்டத்தில் பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதில் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், லோக் ஜன்சக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அம்பேத்கரை கௌரவப்படுத்தாத காங்கிரஸ் கட்சி இவ்விவகாரத்தில் தலையிடவே கூடாது. இதை காங்கிரஸ் கட்சி அரசியலாக்கப் பார்க்கிறது. மக்கள் இதில் போராடுகிறார்கள். ஆனால் எதிர்கட்சியான காங்கிரஸ் இதற்கு ஆதரவு தெரிவிக்கும்போதே அதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்பதை நாம் அறிய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும். ஆனால் இப்போது அவரின் ஆதரவாளர் போன்று பேசி வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com