விடியோகான் குழுமத்துக்கு ஐசிஐசிஐ வங்கி ரூ.3,250 கோடி கடன் கொடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ள அதன் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) சந்தா கோச்சாரின் மைத்துனர் ராஜீவ் கோச்சார் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ராஜீவ் கோச்சார் தென்கிழக்கு ஆசிய நாட்டுக்குச் செல்வதற்காக மும்பை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்தார்.
தேடும் நபராக சிபிஐ அறிவித்துள்ளதை அடுத்து, அவரை வெளிநாடு செல்ல விடாமல் விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர், சிபிஐ அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2012-ஆம் ஆண்டில் விடியோகான் குழுமத்துக்கு ஐசிஐசிஐ கடன் வழங்கியது தொடர்பாக அந்த வங்கியின் சில அதிகாரிகளிடம் சிபிஐ ஏற்கெனவே விசாரணையை தொடங்கி விட்டது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:
அந்த நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டது தொடர்பாக பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். ஏதேனும், தவறு நேர்ந்திருக்கும் பட்சத்தில் ஐசிஐசிஐயின் மேலாண் இயக்குநராகவும் இருக்கும் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோருக்கு அதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி வைப்போம்.
முதல்கட்ட விசாரணையில் விடியோகான் குழுமத்தின் சிஇஓ வேணுகோபால் தூத், தீபக் கோச்சர் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக, விடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் சந்தா கோச்சாருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று ஐசிஐசிஐ தலைவர் எம்.கே.சர்மா தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிராஜா திரையில் தோன்றி நடித்த திரைப்படங்கள்!

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை
இயக்குநர் பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் புகழஞ்சலி!

சின்ன திரையிலும் முத்திரை பதித்த பாரதிராஜா!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!


