இட ஒதுக்கீட்டுக்கு எதிரான 'பாரத் பந்த்': பிகாரில் 12 பேர் படுகாயம்! 

இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக செவ்வாயன்று நாடு தழுவிய அளவில் நடக்கும் 'பாரத் பந்த்' போராட்டத்தில், பிகாரில் இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான 'பாரத் பந்த்': பிகாரில் 12 பேர் படுகாயம்! 
Published on
Updated on
1 min read

பாட்னா: இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக செவ்வாயன்று நாடு தழுவிய அளவில் நடக்கும் 'பாரத் பந்த்' போராட்டத்தில், பிகாரில் இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் தளர்வு செய்து சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை எதிர்த்து, இம்மாதம் 2-ஆம் தேதி 'பாரத் பந்த்' போராட்டம் நடந்தது. இதில் பலர் பலியாகினர். நாடு முழுவதும் பலர் காயம் அடைந்தனர். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.

அதற்கு எதிர்வினையாக இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக செவ்வாயன்று நாடு தழுவிய அளவில் 'பாரத் பந்த்'  போராட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே அதற்குரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திங்களன்று அறிவுறுத்தியது.

இந்நிலையில் செவ்வாயன்று நாடு தழுவிய அளவில் நடக்கும் 'பாரத் பந்த்' போராட்டத்தில் பிகாரில் இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக பெரும்பாலும் உயர் சாதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பிகாரின் பாட்னா, பேகுசராய், லகிஷராய், முஸாபர்பூர், போஜ்புர், ஷேக்புரா  மற்றும் தர்பங்கா ஆகிய மாவட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் சாலை மறியல், ரயில் மறியல் மற்றும் வலுக்கட்டாயமாக கடை அடைப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர்.

இவர்களது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு ஆதரவு கொடுக்கும் தரப்பினர், பெரும்பாலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தலித் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போராடினர்.

இந்த மோதலில் பல்வேறு பகுதிகளில் 12 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைத்துள்ளனர் என்றும், ஆங்காங்கே துப்பாக்கி சத்தங்கள் கேட்டதாகவும் மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com