ஏர் இந்தியா விமானத்தில் 'நடு வானில்' கழண்டு விழுந்த ஜன்னல்

ஏர் இந்தியா விமானத்தில் ஜன்னல் கழண்டு விழுந்த விபத்தில் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் 'நடு வானில்' கழண்டு விழுந்த ஜன்னல்

அமிர்தசரஸில் இருந்து தில்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஜன்னல் கழண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 19.4.18 அன்று போயிங் 787 ட்ரீம்லைனர் வகை ஏர் இந்தியா விமானம் ஏஐ 462 அமிர்தசரஸில் இருந்து தில்லி சென்ற வழியில் அதன் ஜன்னல் கழண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் சுமார் 15 நிமிடங்கள் விமானத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

பின்னர் துரிதமாக செயல்பட்ட விமானப் பணிப் பெண்கள் நிலைமையை சரிசெய்தனர். இந்த விபத்து குறித்து விசாரித்து வருவதாக விமான போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com