
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது. பின்னர் மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று ஏப்ரல் 17-ந் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 24-ஆம் தேதி ஆகும். மேலும் வேட்புமனு திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் 27-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பெறப்பட்டு வந்தன. பொது தொகுதிகளுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் தனி தொகுதிகளுக்கு ரூ.5 ஆயிரம் டெபாசிட் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 1,127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இவற்றில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 174 பேரும், பாஜக-வில் இருந்து 178 பேரும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
141 பேர் ஜனதா தளம் (ஜே.டி-எஸ்) கட்சியில் இருந்தும், 457 பேர் சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.