எடியூரப்பா மகனுக்கு மறுப்பு? சித்தராமையா மகனுக்கு வரவேற்பு!

எடியூரப்பா மகன் விஜயேந்திரா மைசூருவில் அமைந்துள்ள வருணா தொகுதியில் இருந்து தனது தேர்தல் பணிகளை தொடங்கி தீவிரம் காட்டி வந்தார்.
எடியூரப்பா மகனுக்கு மறுப்பு? சித்தராமையா மகனுக்கு வரவேற்பு!

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது. பின்னர் மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இதையடுத்து அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் இவ்விரு கட்சிகளும் வெளியிட்டு வருகின்றன.

அவ்வகையில், இரு தொகுதிகள் தவிர்த்து இதர தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக திங்கள்கிழமை வெளியிட்டது. இதில் கர்நாடக மாநில பாஜக தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரும், கர்நாடகத்தின் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மகனுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எடியூரப்பா மகன் விஜயேந்திரா மைசூருவில் அமைந்துள்ள வருணா தொகுதியில் இருந்து தனது தேர்தல் பணிகளை தொடங்கி தீவிரம் காட்டி வந்தார். இந்நிலையில், அவர் இந்த தொகுதியில் இருந்து போட்டியிடமாட்டார் என எடியூரப்பா திங்கள்கிழமை அறிவித்துள்ளார். இது அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மகன் டாக்டர். யாதேந்திரா இதே வருணா தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com