நீதிபதி ஜோசப் சர்ச்சை: மத்திய அரசிடம் முறையிட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முடிவு?

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்கும் பட்டியலில் நீதிபதி ஜோசப் பெயர் 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது குறித்து மத்திய அரசிடம் முறையிடுவுள்ளதாக தலைமை நீதிபதி உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
நீதிபதி ஜோசப் சர்ச்சை: மத்திய அரசிடம் முறையிட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முடிவு?
Published on
Updated on
1 min read

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்கும் பட்டியலில் நீதிபதி ஜோசப் பெயர் 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது குறித்து மத்திய அரசிடம் முறையிடுவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோசப் ஆகிய 3 பேர் செவ்வாய்கிழமை பதவியேற்கவுள்ளனர்.

நீதிபதி கே.எம்.ஜோசப்பை நியமிப்பதற்கு கொலீஜியம் மத்திய அரசிடம் பரிந்துரை செய்ததில் இருந்தே சர்ச்சைகள் கிளம்பியது. நீதிபதி ஜோசப்பை பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்ததை அடுத்து கொலீஜியம் 2-ஆவது முறையாக அவரது பெயரை மீண்டும் பரிந்துரை செய்தது. இதையடுத்து, மத்திய அரசு அவரை நியமனம் செய்ய ஒப்புதல் அளித்தது. இதனால், நீதிபதி ஜோசப் பரிந்துரை முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தால் மத்திய அரசு மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இவர்கள் செவ்வாய்க்கிழமை பதவியேற்பதற்கான பட்டியலில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரண் ஆகியோரது பெயர்களைத் தொடர்ந்து நீதிபதி ஜோசப்பின் பெயர் 3-ஆவதாக இடம்பெற்றுள்ளது. 

நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரண் ஆகியோர் முறையே 2017 மற்றும் 2016ம் ஆண்டுகளில்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், நீதிபதி ஜோசப் அதற்கு முன்பே உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். எனவே, பதவி மூப்பு அடிப்படையில் நீதிபதி ஜோசப்பின் பெயரே பட்டியலில் முதலில் வர வேண்டும் என்று நீதிபதிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால்,  இந்திரா பானர்ஜி, வினீத் சரண் இருவரும் நீதிபதி ஜோசப்புக்கு முன்பே நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டவர்கள். அதற்குப் பிறகுதான் ஜோசப் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அதன் அடிப்படையில்தான் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் தரப்பில் கூறுப்படுகிறது.

மத்திய அரசின் இந்த சர்ச்சை நடவடிக்கைக்கு கொலீஜியம் குழுவில் இடம்பெற்றுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லோகூர் மற்றும் குரியன் ஜோசப் உள்ளிட்ட சிலர் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடன் அவர்கள் திங்கள்கிழமை முறையிட்டனர். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,  தலைமை நீதிபதி அந்தஸ்துக்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கும் ரஞ்சன் கோகோய் திங்கள்கிழமை விடுப்பில் இருப்பதால், அவருடன் கலந்தாலோசித்து மத்திய அரசிடம் இந்த விவகாரத்தை கொண்டு செல்வதாக உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com