வெளியுறவுத் துறை விவகாரங்கள்: செய்தியாளர்களிடம் ரவீஷ் குமார் விளக்கம்

மெஹுல் சோக்ஸி, நீரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட விவகாரங்களின் தற்போதைய நிலை குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
வெளியுறவுத் துறை விவகாரங்கள்: செய்தியாளர்களிடம் ரவீஷ் குமார் விளக்கம்

மெஹுல் சோக்ஸி, நீரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட விவகாரங்களின் தற்போதைய நிலை குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.  

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, 

"அஸ்ஸாமில் தேசிய வரைவுப் பதிவேடு வெளியிடுவதற்கு முன்பும் சரி, வெளியிட்ட பிறகும் சரி வங்கதேச அரசுடன் நாங்கள் நெருக்கமான தொடர்பிலேயே இருக்கிறோம். அஸ்ஸாம் குடிமக்களை கண்டறிவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தயாரிக்கப்பட்ட வரைவுப் பதிவேடு தான் இது என்று அவர்களிடம் உறுதிபட தெரிவித்திருக்கிறோம்.

மெஹுல் சோக்ஸியை நாடு கடத்தும் கோரிக்கையை கடந்த 3-ஆம் தேதி ஆண்டிகுவா & பார்புடா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் சமர்பித்துள்ளோம். அந்த கோரிக்கையை ஆராய்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் நாம் காத்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஏதேனும் முன்னேற்றம் வரும் பட்சத்தில் நாங்கள் தெரிவிப்போம். 

நீரவ் மோடியை நாடு கடத்தக்கோரி அமலாக்கத் துறை கோரிக்கை வைத்தனர். அதன்படி, பிரிட்டனில் யு.கே. சென்ட்ரல் அத்தாரிட்டியிடம் (பிரிட்டன் உள்துறை அமைச்சகத்தின்கீழ் வரும் அமைப்பு), நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோருவது தொடர்பான ஆவணங்களை அளித்துள்ளோம். பிரிட்டன் அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். 

லண்டனில் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கம் போராட்டம் என்பது பிரிவினைவாத செயல். இது இந்திய பிரதேசத்துடனான ஒற்றுமையை பாதிக்கும். இது வன்முறையையும், வெறுப்பையும் உண்டாக்கும் என்று தெரிவித்துள்ளோம். இருநாட்டு உறவை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

விஜய் மல்லையா வழக்கு தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை செப்டம்பர் 12-ஆம் தேதி வருகிறது. விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கையும் எடுக்குமாறு அவர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்த உள்ளோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com