
மழை, வெள்ளப் பாதிப்பில் தத்தளித்து வரும் கேரள மாநிலத்துக்கு நடிகா்கள் விஜய் சேதுபதி, தனுஷ் ஆகியோா் நிதி வழங்கியுள்ளனா்.
கேரளத்தில் கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்குப் பெருமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 100 போ் வரை பலியாகியுள்ளனா். 50 ஆயிரம் போ் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனா். இதற்கு உதவிடும் வகையில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் உதவிக் கரம் நீட்டி வருகின்றனா்.
நடிகா்கள் கமல்ஹாசன், சூா்யா, காா்த்தி, விஷால் உள்ளிட்டோா் இதுவரை நிதியுதவி அளித்துள்ளனா். இதைத் தொடா்ந்து நடிகா் விஜய் சேதுபதி ரூ. 25 லட்சத்தை கேரள மாநிலத்துக்கு வழங்கியுள்ளாா். நடிகா் தனுஷூம் ரூ. 15 லட்சத்தை வழங்கியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.