கோழிக்கோடு மாவட்டத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்

கோழிக்கோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த சாலை போக்குவரத்துகள் தற்போது சீரடைந்து வருவதால் பேருந்துகள் சனிக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோழிக்கோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த சாலை போக்குவரத்துகள் தற்போது சீரடைந்து வருவதால் பேருந்துகள் சனிக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன. 

கேரள மாநிலம் கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பல இடங்களில் சாலை, விமான மற்றும் ரயில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் தற்போது சாலை போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

சாலைகளில் தேங்கியிருந்த வெள்ள நீர் வற்றியதால் அங்கு  மீண்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன்மூலம், கோழிக்கோட்டில் இருந்து முக்கம், மவூர், கக்கோடி, பலுசேரி உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், வயநாடு, மலப்புரம், பாலக்காடு(மஞ்சேரி - பெரிந்தல்மன்னா வழி) மற்றும் திரிச்சூர்(அத்திக்காவு - வடக்காஞ்சேரி வழி) ஆகிய மாவட்டங்களுக்கும் சனிக்கிழமை முதல் பேருந்து சேவை தொடங்கியுள்ளது. 

"கோழிக்கோட்டில் உள்ள பிற நகரங்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு முடிந்த அளவுக்கு பேருந்துகளை இயக்க முயற்சி செய்து வருகிறோம். திங்கள்கிழமை முதல் பேருந்து சேவை முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று பேருந்து இயக்க அமைப்பின் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

ஞாயிற்றுக்கிழமையும் அரசு அலுவலகங்கள்:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகள் சென்றடைய மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஞாயிற்றுக்கிழமை இயங்கும் என்று அம்மாவட்ட ஆட்சியர் யு.வி. ஜோஸ் அறிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் பணியில் இருக்கின்றனரா என்பதை உறுதிசெய்யுமாறும் துறை தலைவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com