சர்ஜிக்கல் ஸ்டிரைக் அதிகப்படியாக அரசியலாக்கப்பட்டுள்ளது:  மாஜி ராணுவ ஜெனரல் டி.எஸ் ஹூடா

சர்ஜிக்கல் ஸ்டிரைக் மிக அதிகப்படியாக அரசியலாக்கப்பட்டு விட்டது என முன்னாள் ராணுவ அதிகாரி டி.எஸ் ஹூடா தெரிவித்துள்ளார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் அதிகப்படியாக அரசியலாக்கப்பட்டுள்ளது:  மாஜி ராணுவ ஜெனரல் டி.எஸ் ஹூடா


சண்டிகர்: சர்ஜிக்கல் ஸ்டிரைக் மிக அதிகப்படியாக அரசியலாக்கப்பட்டு விட்டது என முன்னாள் ராணுவ அதிகாரி டி.எஸ் ஹூடா தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் நடந்த ராணுவ இலக்கிய விழாவில் எல்லை தாண்டிய தாக்குதல்கள் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பின்னர் டி.எஸ் ஹூடா செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. அது ராணுவம் சார்ந்த நடவடிக்கை. அது நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

ஆனால், அது இப்போது எந்த அளவிற்கு அரசியலாக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. அது குறித்து சரியா தவறா என்று அரசியல்வாதிகள்தான் சிந்தித்து பார்க்க வேண்டும்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது குறித்து துவக்கத்தில் சந்தேகங்கள் எழுவது இயற்கை தான். ஆனால் தொடர்ந்து ராணுவ தாக்குதல்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகப்படியாக சந்தேகங்களை எழுப்புவது தேவையில்லாதது. அது குறித்து தொடர்ந்து பேசி வருவது சரியல்ல. சர்ஜிக்கல் ஸ்டிரைக் ரகசியமாக வைக்கப்பட்டதாலேயே நாங்கள் நினைத்ததை விட சிறப்பாக செய்ய முடிந்தது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது குறித்து முதலில் பெருமைப்பட்ட நிலையில்,  அது குறித்து தொடர்ந்து பேசி வருவது சரியல்ல.

மக்கள் நமது வரலாறு குறித்தும், ராணுவ செயல்பாடுகள் குறித்தும் அறிய வேண்டும். ராணுவத்தினர் பொதுவாக அளவாகவே பேசுவார்கள். ஆனால், இது போன்ற விழாக்களால் பொதுமக்கள், ராணுவத்தினரிடம் கலந்துரையாடிவதால் அவர்கள் பார்வை எப்படி இருக்கும் என்பது புரிந்து கொள்ள முடியும். ராணுவத்தினரை மக்கள் புரிந்து கொள்ள இது போன்ற விழாக்கள் அவசியம் என்றார்.

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உரி பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடிக்கும் கொடுக்கும் விதமாக செப்.29 ஆம் தேதி ராணுவத்தினர் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய போது வடக்கு ராணுவத்தின் தளபதியாக இருந்தவர் ஹூடா.

இந்திய எல்லைக்குள் வருவதற்காக, பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டிருந்த பயங்கரவாதிகள் பலர் இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு, தொடர்ந்து பெருமையாக பேசி வருகிறது. அதை விமர்சிக்கும் வகையில் ஹூடா பேசியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com