தில்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது: அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு

புது தில்லியில் 31வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதித்துறை அமைச்சர்  அருண் ஜேட்லி தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தில்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது: அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு


புது தில்லியில் 31வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதித்துறை அமைச்சர்  அருண் ஜேட்லி தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி வரித்தாக்கலை எளிமைபடுத்துவது, 99 சதவிகிதப் பொருட்களுக்கு அதிகபட்சமாக 18 சதவீத வரியை விதிப்பது உள்ளிட்ட விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார்.

நாடு முழுவதிலும் ஒரேமாதிரியான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்தது.  இதில், ஏற்கெனவே அமலில் இருந்த பலமுனை வரிகள் நீக்கப்பட்டு 5, 12, 18, 28 என்ற நான்கு விதமான படிநிலைகளில் வரி விதிப்பு முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. 

ஜி.எஸ்.டி. அமல்படுத்தியதில் இருந்து பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு ஏற்ப வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வரி விதிப்பு அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரையிலும் 300-க்கும் மேற்பட்ட பொருள்களின் வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 

5 மாநிலத் தேர்தலுக்குப் பிறகு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மேலும் எளிதாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடியும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், அதிகபட்ச வரி விதிப்பான 28 சதவீதத்தில் இருக்கும் பல்வேறு பொருள்கள் 18 சதவீத வரி வரம்புக்குள்ளும், 18 சதவீதத்தில் இருக்கும் சில பொருள்கள் 12 சதவீத வரி வரம்புக்குள்ளும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com