எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம்: பிரதமர் மோடி

இந்தியாவின் மிக நீளமான ரயில் மற்றும் வாகன மேம்பாலத்தை பிரதமர் மோடி, செவ்வாய்கிழமை திறந்து வைத்தார். 

News image
Updated On :25 டிசம்பர் 2018, 7:52 pm IST

அஸ்ஸாம் மாநிலம் திப்ருகார் அருகே போகிபீல் என்ற இடத்தில் பிரம்மபுத்திரா நதிக்குக் குறுக்கேக் கட்டப்பட்ட இந்தியாவின் மிக நீளமான ரயில் மற்றும் வாகன மேம்பாலத்தை பிரதமர் மோடி, செவ்வாய்கிழமை திறந்து வைத்தார். இந்த பாலத்தின் மூலம் அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம் இடையிலான பயண நேரம் வெகுவாகக் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மோடியுடன் அஸ்ஸாம் ஆளுநர் ஜக்தீஷ் முகி, முதல்வர் சர்பானந்தா சோனோவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேம்பாலத்தைத் திறந்து வைத்த பிறகு தலைவர்கள் அனைவரும் சில மீட்டர்கள் நடந்து சென்று பார்வையிட்டனர்.

இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,

ஊழலுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து போராடி வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாகத் தான் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தொடர்புடைய ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கெல் விசாரணைக்காக இந்தியா கொண்டுவரப்பட்டார். இதை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் யாராலும் நடைமுறைப்படுத்தியிருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது.

ஒருபுறம் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் 1.25 கோடி குடும்பங்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. மறுபுறம் பினாமி தடுப்பு நடவடிக்கையின் மூலம் ஊழல்வாதிகளின் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள வீடு, வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சுதந்திரத்துக்குப்பிறகு கடந்த 60-70 ஆண்டுகளில் கட்டப்பட்ட பாலங்களுக்கு இணையாக இந்த ஆட்சிக்காலத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 3 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் விரைந்து செயல்படுத்த நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.