சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் தனது அமைச்சரவையை செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்துள்ளார். ஒரு பெண் எம்எல்ஏ உள்பட 9 எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள காவலர் அணிவகுப்பு மைதானத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகம்மது அக்பர், ரவீந்திர சௌபே, ஜெய்சிங் அகர்வால், உமேஷ் படேல், அனிலா பெதியா, கவாஸி லக்மா, பிரேம்சிங் தேகாம், சிவ் குமார் தஹாரியா, ருத்ரா குரு ஆகிய 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆளுநர் ஆனந்திபென் படேல், 9 பேருக்கும் பதவி பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அமைச்சர்கள் 9 பேரும், ஹிந்தியில் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் முதல்வர் பூபேஷ் பகேல், காங்கிரஸ் மூத்த தலைவர் பி.எல். புனியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர்களாக பதவியேற்றவர்களில், முகம்மது அக்பர் 4 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். அமைச்சரவையில் இருக்கும் ஒரே முஸ்லிம் மத பிரமுகரும் அவரே ஆவார். அமைச்சர் சிவ்குமார் தஹாரியா, காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் ஆவார். அமைச்சர் ருத்ரா குரு, பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேலுடன் சேர்ந்து டி.எஸ். சிங் தியோ, தம்ராவாஜ் சாகு ஆகிய 2 பேர் கடந்த 17ஆம் தேதி அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், தற்போது 9 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இவர்களையும் சேர்த்து, அமைச்சர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
அமைச்சர்கள் யாருக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
சத்தீஸ்கரில் முதல்வருடன் சேர்த்து அதிகப்பட்சம் மொத்தம் 13 பேர் அமைச்சர்களாக இருக்க முடியும்.
சத்தீஸ்கரில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 68இல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதன்மூலம், சத்தீஸ்கரில் 15 ஆண்டுகளாக இருந்த பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதையடுத்து சத்தீஸ்கர் முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பூபேஷ் பகேல் கடந்த 17ஆம் தேதி பதவியேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி நீதிமன்றத்துக்கு 4-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
வீடு புகுந்து நகை திருடிய இளைஞா் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


