வாஜ்பாயின் கனவுகளை பிரதமர் மோடி நனவாக்கி வருகிறார் என பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு சிக்பேட்டையில் செவ்வாய்க்கிழமை வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இலவச உடல் பரிசோதனை முகாமைத் தொடக்கி வைத்து அவர் பேசியது: இந்தியா அனைத்துத் துறைகளில் சரிசமமான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவாக இருந்தது. அதனை பிரதமர் மோடி நனவாக்கி வருகிறார்.
நாட்டின் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது, இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கு பிறகு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் அனைத்துத் துறைகளும் வளர்ச்சிப் பாதையில் செல்கின்றன.
வாஜ்பாய் பதவியிலிருந்த போது, நாட்டின் எல்லையில் பிரச்னை ஏற்படுத்தி வந்த பாகிஸ்தானுக்கு உரிய பாடம் கற்பிக்கப்பட்டது. கார்கில் வெற்றியால் நமது நாட்டின் ராணுவத்தினருக்கு மரியாதையும், கெளரவமும் கிடைத்தது. நாட்டில் நெடுஞ்சாலை புரட்சியைச் செய்தவர் வாஜ்பாய். தற்போது மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகப் பதவி வகித்துவரும் நிதின் கட்கரியும், வாஜ்பாயின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறார். நாடுகண்ட முக்கியத் தலைவர்களில் ஒருவரான வாஜ்பாயின் மறைவு நாட்டுக்கு மட்டுமின்றி, பாஜக வுக்கும் பேரிழப்பு என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தமிழக அரசு தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!

தவெகவில் இணைந்தது ஏன்? சி. மகேந்திரன் விளக்கம்
இந்த வார ஓடிடி படங்கள்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



