முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஹனுமன் விவகாரம் குறித்து பாஜக விளக்கமளிக்க வேண்டும்

இறைவன் ஹனுமன் தொடர்பாக தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துகள் குறித்து தனது நிலைப்பாட்டை பாஜக தெளிவுப்படுத்த வேண்டும் என்று சங்கராசாரியார் அதோக்ஷாஜானந்த்

Updated On :26 டிசம்பர் 2018, 2:29 am IST


இறைவன் ஹனுமன் தொடர்பாக தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துகள் குறித்து தனது நிலைப்பாட்டை பாஜக தெளிவுப்படுத்த வேண்டும் என்று சங்கராசாரியார் அதோக்ஷாஜானந்த் தேவ் வலியுறுத்தியுள்ளார்.
ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர் ஹனுமன் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் லட்சுமி நாராயண் செளதரி கூறியதையடுத்து சங்கராச்சார்யார் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
பாஜக தலைவர்கள் பலரும் ஹனுமன் குறித்து பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். இதை மதுராவில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசியபோது சங்கராசாரியார் அதோக்ஷாஜானந்த் தேவ் கண்டித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒரு பக்கம், பாஜக ராமர் கோயில் விவகாரத்தை எழுப்பி வருகிறது. ஆனால் மறுபக்கம், அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஹிந்து கடவுள்கள், பெண் தெய்வங்கள் குறித்து விமர்சித்து, மக்களின் மத உணர்வுகளை காயப்படுத்துகின்றனர்.
எனது தம்பி பரதனுக்கு சமமானவர் ஹனுமன் என்று ராம பிரான் கூறியிருக்கிறார். எனவே இறைவன் ஹனுமன் இன்றி அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் முழுமையடையாது. ஹனுமனை முஸ்லீம் மதத்தவர் என்று பாஜக எம்எல்சி ஒருவர் கூறினார். அது உண்மையென்றால், ஹனுமனுக்கு அவர்கள் மசூதி கட்ட வேண்டும். ஹனுமனை தலித் என்று கூறி முதல்வர் யோகி ஆதித்யநாத் அனைவரது மத உணர்வுகளையும் காயப்படுத்தி விட்டார். எனினும், முதல்வரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக அவரது அலுவலகம் பின்னர் விளக்கம் அளித்தது.
இவ்வாறு பாஜக தலைவர்கள் பலரும், பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் இதுகுறித்து பாஜக இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. ஹனுமன் குறித்த விமர்சனங்களுக்கு பாஜக மேலிடமும், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும், பதிலளிக்காமல் அமைதியாக இருப்பது, ராமர் கோயில் விவகாரத்தை வாக்குக்காக பயன்படுத்துகிறது என்பதை தெரியப்படுத்துகிறது. அயோத்தியில் ராமர் கோயிலை சாதுக்களும், தர்மாச்சார்யாக்களும் இணைந்து கட்டிக் கொள்வோம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.