மோடியால் மீண்டும் பிரதமர் ஆக முடியாது: பாஜக எம்பி ஷத்ருகன் சின்ஹாவே சொல்கிறார்

பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இணை அமைச்சருமான ஷத்ருகன் சின்ஹா எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.
மோடியால் மீண்டும் பிரதமர் ஆக முடியாது: பாஜக எம்பி ஷத்ருகன் சின்ஹாவே சொல்கிறார்
Published on
Updated on
1 min read

திருவனந்தபுரம்: பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இணை அமைச்சருமான ஷத்ருகன் சின்ஹா எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.

அதில், பாஜக ஆட்சி, பிரதமர் மோடி குறித்து காரசாரமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தியாவின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடி பதவி வகிக்க மாட்டார் என்பதுதான்.

சரி வாருங்கள் முழு பேட்டியையும் படிப்போம்..

தற்போதைக்கு இந்தியாவிலும் சரி, பாஜகவிலும் சரி ஒன் மேன் ஷோவும், இரண்டு மேன் ஆர்மியும் தான் நடந்து வருகிறது. அதாவது இந்தியாவை மோடியும், கட்சியை மோடி மற்றும் அமித் ஷாவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். மோடியைப் பற்றி தற்போது மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது ஆணவம், அகந்தை அதிக ஆணவம் என்பதே.

நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளை மத்திய அரசும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் முற்றிலும் மறந்தே விட்டனர். அதனால்தான் கடந்த 5 மாநில தேர்தல்களிலும் பாஜக தோல்வியைத் தழுவியது. மக்களிடையேயான தொடர்பை மோடியும், பாஜகவும் முற்றிலும் இழந்துவிட்டார்கள். அதன் எதிரொலியாக வரும் பொதுத் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை சந்திப்பார்கள் என்றும் ஷத்ருகன் சின்ஹா கூறினார்.

மேலும், பணமதிப்பிழப்பு என்பது அரைவேக்காட்டு நடவடிக்கை, இதனுடன் அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட ஜிஎஸ்டியும் இந்திய பொருளாதாரத்தையே நாசமாக்கிவிட்டன. எதையுமே செய்து முடிக்கும் வரை மோடி யாரிடமும் கலந்தாலோசனை செய்வதில்லை என்றும் சின்ஹா குற்றம்சாட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com