
சித்தூர்: தாமதமாக பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பள்ளி ஒன்று நிர்வாணமாக நிற்கும் தண்டனை வழங்கியுள்ள அதிர்ச்சி சம்பவம் தெரியாய்வந்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூரில் சைதன்யா பாரதி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த புதன்கிழமையன்று காலதாமதாக வந்த நான்காவது மற்றும் ஐந்தாவது வகுப்பு மாணவர்களை நிர்வாணப்படுத்தி வகுப்பறைக்கு வெளியே ஆசிரியர்கள் முட்டிப் போட வைத்துள்ளனர். இந்த தண்டனை குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
சம்பவம் குறித்து தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி துறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். ஆயினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
எனவே தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்துக்கு புகார் மனு அளித்துள்ள பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்தூரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.