நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் அரசியலமைப்புக்கு எதிரானது: உச்ச நீதிமன்றத்தில் சீதாராம் யெச்சூரி வழக்கு

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் அரசியலமைப்புக்கு எதிரானது: உச்ச நீதிமன்றத்தில் சீதாராம் யெச்சூரி வழக்கு

நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை நடத்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசுத் ஆகிய மூன்று பேர் அடங்கிய அமர்வு, இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு பிப்ரவரி 2-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

மேலும் இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது:

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது இந்திய அரசயில் அமைப்புச் சட்டத்துக்கு எதிரான செயல். இது மத்தியில் ஆளும் பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கினைக் காட்டுகிறது. 

எனவே இதுபோன்ற நடவடிக்கையை உடனடியாக நீக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com