நீங்கள் உங்களது தேர்வுக்கு தயாராகி விட்டீர்களா?: மோடியை மடக்கிய பள்ளிச் சிறுவன் 

நீங்கள் உங்களது தேர்தல் தேர்வுக்கு தயாராகி விட்டீர்களா என்று உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடியை பள்ளிச் சிறுவன் ஒருவன் மடக்கிய சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நீங்கள் உங்களது தேர்வுக்கு தயாராகி விட்டீர்களா?: மோடியை மடக்கிய பள்ளிச் சிறுவன் 
Published on
Updated on
1 min read

புதுதில்லி: நீங்கள் உங்களது தேர்தல் தேர்வுக்கு தயாராகி விட்டீர்களா என்று உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடியை பள்ளிச் சிறுவன் ஒருவன் மடக்கிய சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாடு முழுவதும் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு,  தேர்வு பயத்தினை போக்கும் வகையில் 'தேர்வு தொடர்பான விவாதம்' என்ற நிகழ்ச்சிக்கு பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. புது தில்லியில் உள்ள டல்கடோரா மைதானத்தில் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அப்பொழுது ஜவஹர் நவோதய வித்யோதயா பள்ளியினைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் திலீப் என்பவன் பிரதமர் மோடியிடம், "நீங்கள் அடுத்த அண்டு வரவுள்ள உங்களது தேர்வுக்கு (நாடாளுமன்ற தேர்தல்) தயாராகி விட்டீர்களா அல்லது பதற்றத்துடன் இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினான். அதற்கு பதிலளித்து பிரதமர் மோடி கூறியதாவது:

நான் அரசியலுக்கு மிகவும் தாமதமாக வந்தேன். பெரும்பாலானோர் என்னை ஏற்றுக் கொள்ளவே இல்லை. நான் அரசியல் சூழலில் இருந்தாலும் இயல்பிலேயே நான் அரசியல்வாதி அல்ல. என்னுடைய இயல்பு வேறுபட்டது. அரசியலில் என்னை  நான் ஒரு அந்நியனாக உணர்கிறேன்.

1.25 கோடி மக்களின் ஆசி எனக்கு உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் எல்லாம் உப விளைவுகள்தான். என்னுடைய முழு நேரம், ஆற்றல், திறமை மற்றும் மூளை செயல்திறன் எல்லாமே இந்த 1.25 கோடி மக்களுக்காக செலவழிக்கப்பட வேண்டும். இந்த தேர்தல்களெல்லாம் வரும் போகும் வெறும் உப விளைவுகள்தான்.

உங்களுக்கு எலாம் வருடத்திற்குஒருமுறைதான் தேர்வு; எனக்கோ ஒருநாளின்  24 மணி நேரமும் தேர்வுதான்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com