
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடிக்கு நீரவ் மோடி மோசடி செய்த விவகாரத்தில், காங்கிரஸுக்கு பங்கு இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
அதில், நீரவ் மோடியின் ஃபையர் ஸ்டார் வைர வியாபார நிறுவனத்தில் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மணு சிங்கவியின் மனைவி அனிதா, நிர்வாக இயக்குநராக உள்ள அத்வைத் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கடந்த 2002 முதல் பங்குதாரராக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்க்வி கூறியதாவது:
பாஜகவும், நிர்மலா சீதாராமனும் என்மீதும், எனது குடும்பத்தார் மீதும் தேவையற்ற குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து அவதூறு பரப்புகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் பாஜக, நிர்மலா சீதாராமன் மற்றும் அவதூறு பரப்பிய ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு தொடர திட்டமிட்டுள்ளேன்.
இதில், எனது மனைவி மற்றும் மகனுக்கு எந்த தொடர்பும் இல்லை. எனது மனைவி நிர்வாக இயக்குநராக உள்ள அத்வைத் ஹோல்டிங்ஸின் உரிமையாளரான கம்லா மில்ஸ் சொத்தின் வாடகைதாரராக நீரவ் மோடியின் நிறுவனம் இருந்தது, மற்றபடி இதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.