தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

எல்லையில் பாக். அத்துமீறித் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள பாதுகாப்புச் சாவடிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வியாழக்கிழமை அத்துமீறித் தாக்குதல் நடத்தினர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:37 pm

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள பாதுகாப்புச் சாவடிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வியாழக்கிழமை அத்துமீறித் தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாரமுல்லா மாவட்டம், உரி பகுதியில் உள்ள பாதுகாப்புச் சாவடிகளில் வியாழக்கிழமை காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு உடனடியாக நமது ராணுவத்தினர் உரிய பதிலடி கொடுத்தனர். இந்தச் சண்டையில் யாரும் காயமடையவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
பிஎஸ்எஃப் வீரர் பலி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் சுனில் குமார் முர்மு (28) சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.