திரிபுராவில் 6 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

திரிபுராவில் உள்ள தன்பூர், சோனமுரா, தெலிமுரா, கடம்தல-குர்தி, அம்பினிநகர் மற்றும் சப்ரூம் ஆகிய 6 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு
திரிபுராவில் 6 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

திரிபுரா: திரிபுராவில் உள்ள தன்பூர், சோனமுரா, தெலிமுரா, கடம்தல-குர்தி, அம்பினிநகர் மற்றும் சப்ரூம் ஆகிய 6 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தங்களின் வாக்குகளை மக்கள் வரிசையில் நின்று பதிவு செய்து வருகின்றனர். 

திரிபுரா சட்டப் பேரவையில் உள்ள 60 தொகுதிகளில் 59-க்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகின. தேர்தல் ஆணையச் செய்தித் தொடர்பாளர் 89.8 சதவீத வாக்குகள் பதிவானதாக குறிப்பிட்டார். 

இந்நிலையில், தன்பூர், சோனமுரா, தெலிமுரா, கடம்தல-குர்தி, அம்பினிநகர் மற்றும் சப்ரூம் ஆகிய 6 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்), சிபிஐ (எம்) கட்சிகளின் வலியுறுத்தியதின் காரணமாக, அந்த 6 வாக்குச் சாவடிகளிலும் மறு வாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 

இதையடுத்து இன்று 6 வாக்குச் சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

சாலிராம் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியில் மார்ச் மாதம் 12-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா மற்றும் மிசோரம் பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றன. மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கான வாக்குப் பதிவு முடிவு மார்ச் 3-ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com