பெங்களூரு: கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என்று தான் கூறவில்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கருத்து தெரிவித்ததாக தகவல்கள் பரவியது. அவரது இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பிரகாஷ் ராஜை கடுமையாக விமர்சித்து கிண்டல் சித்திரங்களும் கருத்துக்களும் பதியப்பட்டு வந்தன.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
தகுதி வாய்ந்த ஒரு நபர் நாட்டின் எந்த மாநிலத்திற்கும் தலைவராகலாம் என்பதே ஒரு இந்தியனாக எனது நிலைப்பாடு. கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்பட எந்த மாநிலமாக இருந்தாலும் மிகவும் மோசமான பிரித்தாளும் தன்மை கொண்ட, வகுப்புவாத அரசியல் பேசுபவர்ககளை வரும் தேர்தல்களில் வெற்றி பெற விடமாட்டோம் என்றுதான் நான் அந்த நிகழ்ச்சியில் பேசினேன்.
என்னுடைய பேச்சை திரித்து பிரசாரம் செய்து எனக்கெதிராக வெறுப்புணர்வை தூண்டுவதன் மூலம் உங்களது பயம் மற்றும் விரக்தி மனநிலையையே தெரியப்படுத்துகிறீர்கள்.
இவ்வாறு பிரகாஷ் ராஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மீனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


