யார் இந்த சோனம் வாங்சுக்? நண்பன் படத்தின் விஜய் கேரக்டர் கொசக்சி பசப்புகழ் இவரா?தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

கதறி அழுதவாறே தாலி கட்டிய மணமகன்! பிகாரில் துப்பாக்கி முனையில் நடந்த திருமணம்!! (விடியோ)

29-வயது பொறியாளரை கடத்திய பெண் வீட்டார் துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட வைத்த சம்பவம் பிகாரில் உள்ள பாட்னாவில் நடந்தேறி உள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2018, 11:49 am IST

பாட்னா: 29-வயது பொறியாளரை கடத்திய பெண் வீட்டார் துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட வைத்த சம்பவம் பிகாரில் உள்ள பாட்னாவில் நடந்தேறி உள்ளது.

பொகரோ ஸ்டீல் பிளாண்டில் பொறியாளராகப் பணி புரியும் விநோத் என்னும் இளைஞரை வற்புறுத்தி திருமண சடங்குகளைச் செய்ய வைத்துள்ளனர் பெண்ணின் உறவினர்கள். தன்னை விட்டு விடும்படி விநோத் கதறியும் அவரைத் துப்பாக்கியை காட்டி அவர்கள் மிரட்டி உள்ளனர். இந்தச் சம்பவம் முழுவதும் விடியோ பதிவும் செய்யப் பட்டுள்ளது.

அந்த விடியோவில் பெண்ணின் உறவினர்கள் “நாங்கள் உனக்குத் திருமணம் தான் செய்து வைக்கிறோம், ஒன்றும் உன்னைத் தூக்கில் தொங்கவிடவில்லை” என்று மணமகனிடம் சொல்கிறார்கள். 

Story image

கடந்த டிசம்பர் மாதம் 3-தேதி வெறு ஒருவரின் திருமணத்திற்கு சென்றிருந்த இடத்தில் பெண்ணின் அண்ணன் சுரேந்திர யாதவ் விநோத்திடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரைக் கடத்தியுள்ளனர். பின்னர் அவரை வற்புறுத்தி திருமணமும் செய்து வைத்துள்ளனர்.

விநோத் குறித்த நேரத்தில் வீடு திரும்பாததால் அவரது சகோதரன் சஞ்சய் குமார் கவலை உற்றிருந்த நிலையில் வந்த தொலைப்பேசி அழைப்பில் அவருக்குத் திருமணம் நடந்துவிட்டதாக யாரோ தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து காவல் துறையில் புகார் ஏதும் கொடுக்கக் கூடாது என்றும், பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொள்ளுமாறும் விநோத்தின் குடும்பத்தினரை மிரட்டி இருக்கிறார்கள். இதனால் செய்வது அறியாமல் தவித்த இவர்கள் இறுதியில் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூடிய விரைவில் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் என்றும் பாட்னா காவல் துறை நம்பிக்க தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.