
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பின்தங்கிய கிராமமான சஹரன்பூரில் உள்ள சிறுவன், அனைவரும் வியக்கும் வகையில் கணக்குப் பாடத்தில் அசத்தி வருகிறான்.
சிராக் (வயது 12), 8-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இச்சிறுவன் பெருக்கல் வாய்ப்பாட்டில் 20 கோடி வரை தடையில்லாமல் கூறி வியக்க வைத்து வருகிறான்.
மேலும், கணக்குப் பாடத்திட்டத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களையும், சான்றுகளையும் வென்றுள்ளான்.
நான் எதிர்காலத்தில் விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது எனது லட்சியம். பிரதமர் நரேந்திர மோடியும், எங்கள் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களும் எங்கள் கிராமத்துக்கு வர வேண்டும். அதுவே எனது விருப்பம் என சிறுவன் சிராக் கூறியுள்ளான்.
நாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். இருப்பினும் எப்படியாவது எனது மகனின் லட்சியத்தின் படி அவனை சிறந்த விஞ்ஞானியாக உருவாக்கி நமது நாட்டை பெருமைப்படச் செய்வேன் என சிராக் தந்தை நரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.