பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ஆம் வகுப்பு மாணவர்

ஹரியாணாவில் உள்ள பள்ளி ஒன்றின் முதல்வரை அதே பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர் சனிக்கிழமை சுட்டுக்கொன்றுள்ளான்.
பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ஆம் வகுப்பு மாணவர்

ஹரியாணாவில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் யமுனாநகர் உள்ளது. இங்குள்ள பள்ளி ஒன்றில் சனிக்கிழமை கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அப்பள்ளியின் முதல்வரை அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளார்.

பள்ளி முதல்வர் ரீட்டா சாபரா, தனது அலுவலகத்தில் பணிகளை மேற்கொண்டிருந்தபோது அந்த மாணவர் திடீரென உள்ளே புகுந்து சரமாரியாக சுட்டுள்ளான்.

இதையடுத்து அந்த பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்கள் அந்த மாணவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அப்பள்ளி முதல்வர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பள்ளியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

இந்நிலையில், அந்த மாணவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டான். அதில், அந்த மாணவன் மனஅழுத்தத்தில் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com