திருமணத்திற்கு முன்னர் மணமகனும், மணமகளும் 'தனித்தனியாக' ஓடிப்போன வினோதம்! 

கர்நாடகாவில் திருமணத்திற்கு முன்னர் மணமகனும், மணமகளும் 'தனித்தனியாக' ஓடிப்போன வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருமணத்திற்கு முன்னர் மணமகனும், மணமகளும் 'தனித்தனியாக' ஓடிப்போன வினோதம்! 
Published on
Updated on
1 min read

கோலார்: கர்நாடகாவில் திருமணத்திற்கு முன்னர் மணமகனும், மணமகளும் 'தனித்தனியாக' ஓடிப்போன வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகாவின் மலூர் நகரத்தின் அருகில் உள்ள சனக்கல் கிராமத்தினைச் சேர்ந்தவர் குரேஷ். மாற்றுத் திறனாளியான இவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அருகாமையில் பங்கார்பேட்டை தாலுகாவில் உள்ள  நல்ல ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சவுமியா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மலூர் நகரத்தில் உள்ள திருமண மணடபம் ஒன்றில் ஞாயிறு அன்று திருமணமும், முன்னதாக சனிக்கிழமை மாலை திருமண வரவேற்பும் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. திட்டமிட்டபடி சனிக்கிழமை மாலை திருமண வரவேற்புக்கு சவுமியா மற்றும் பெண் வீட்டார் யாருமே வரவில்லை.  பின்னர்தான் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத காரணத்தால் பெற்றோருக்குத் தெரியாமல் சவுமியா வீட்டை விட்டு ஓடிப்போன விஷயம் குரேஷ் வீட்டாருக்குத் தெரிய வந்தது.

எங்கு தேடியும் சவுமியா கிடைக்கவில்லை. இதனால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தினை நிறுத்த  விரும்பாத பெண் வீட்டார், சவுமியாவின் ஒன்று விட்ட சகோதரியான வெங்கடரத்னம்மா  என்பவரை குரேஷ்க்கு மணமுடிக்க முடிவு செய்தனர். முதலில் இதற்கு சம்மதிக்காத வெங்கடரத்னம்மாவின் பெற்றோர் பின்னர் சம்மதித்தனர். இறுதியில் சனிக்கிழமை இரவு குரேஷ்-வெங்கடரத்னம்மா நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் திட்டமிட்டபடி ஞாயிறு காலை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது 

ஆனால் ஞாயிறன்று காலை அழகு நிலையமொன்றுக்கு செல்வதாக கூறி விட்டு குரேஷ் மண்டபத்தினை விட்டுச் சென்றார். ஆனால் போனவர் வெகுநேரம் கழித்தும் மண்டபம் திரும்பவில்லை. இதன் காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடரத்னம்மாவின் உறவினர் ஒருவர் சவுமியாவும், குரேஷும் ஏன் ஓடிப் போனார்கள் என்று தெரியவில்லை; ஆனால் தற்பொழுது எங்கள் வீட்டுப் பெண் வெங்கடரத்னம்மா தேவை இல்லாமல் சோகத்தில் உள்ளார் என்று தெரிவித்தார்.             

இதுதொடர்பாக புகார் எதுவும் கொடுக்கபபடவில்லை என்று தெரிவித்த கோலார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோகினி, புகார் அளிக்கப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com